மணியன் குல முழு நீள வீரவரலாறு :
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கொங்கு நாட்டுப் பழந்தமிழ்க் கல்வெட்டில் "*மணியன்*"என்ற பெயர் குறிப்பிடபட்டுள்ளது. மணியன்பாளையம் என்ற ஊரும் உள்ளது.மணியனூா்(மணியன்+ஊர்) என்றும் ஓர் ஊர் உள்ளது.பத்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்றில் "காமிண்டன் மணியன் மணியனார்" என்ற தொடர் காணப்படுகிறது. எனவே "மணியன்" என்ற குல முதல்வரைக் கொண்டு மணியன் குலப் பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
மணி என்பது நெல் முதலிய தானிய மணிகளை குறிக்கும். மணிகளை விளைவித்தவர்கள் மணியன் குலத்தாா் என பெயர்பெற்றனர் என்று சிலரும், ஆதலால் "மணியம் என்பது ஊர் ஆட்சி செய்யும் உரிமையையும், மணியகாரா் என்பது அவ்வாறு ஆட்சி செய்பவர்களையும் குறிக்கும். மணியம் செய்தவர்கள் மணியன் குலத்தார் என்று பெயர் பெற்றிருக்கலாம் என்று சிலரும், *தானிய மணிகளை உற்பத்தி செய்வதில் வல்லவர்கள் மணியன் குலத்தார்* என்றும், "மணியம்" என்பது அதிகார பெயர். *அதிகாரம் செய்தவர்கள் மணியன் குலத்தார் எனப்பட்டனா்* என்றும் வராலறு கூறுகிறது.
கோடந்தூர் மணியன் குலத்தினர் வவ்வாலை குலக்குறியாக கொண்டுள்ளனா். கோடந்தூர் இராசக்கோவிலில் வவ்வாலை அழைக்கும் சடங்கு இன்றும் நடை பெறுகிறது.
சேதுராமன் என்பவர் "மணியம்" என்பதற்க்கு "வவ்வால்" என பொருள் கூறி வவ்வாலை அடையாள சின்னமாக உடையவா்கள் மணியன் குலத்தார் என்று கூறுகிறார்.
தமிழ் பேரகராதி *"மணியம்" என்பதற்கு கிராமம், கோயில்,மடம் இவைகளை நிர்வாகம் செய்து மேற்மார்வையிடும் தொழில் என்று கூறுகிறது.* தொல்காப்பிய உரையிலேயே "மணியகாரன்" என்ற சொல் வருகிறது. *"கொங்கு சமுதாயத்தில் "மணியகாரா்" உயர்ந்த நிலையில் உள்ளவராகவும்,மணியம் என்பது பொறுப்பான உயர்ந்த தொழிலாகவும் கருத்தபடுகிறது*
*காணியூா்கள்:*
மணியன் குல காணிப்பாடலில் மோகனூர், ஆரியூர், மணியனூா், பாலமேடு, முத்தூர், திங்களூர், மருதுறை, கிடாரம், நிரவியூர், மணபள்ளி, அயிலூா்,புன்னம், அலகு மலை, இறையனூா், கூடலூா், பெருச்சாணி, மானூா், காரையூா்,வாணியம்பாடி, விசயமங்கலம், ஏழூா், காங்கயம், எண்ணமங்கலம், மணித்திடல், கடத்தூா், வடிவுடையமங்கலம்,வேம்பத்தி, ஆத்தூா், அத்திப்பாளையம்,சென்னிமலை. குடந்தை, வயிரூசி, தூக்காச்சி ஆகிய ஊர்கள் காணியூர்கள்.
காணியூா்களை மையப்படுத்தி
*கரூா் மணியன்
*கோடந்துறை மணியன்
*மோகனூா் மணியன்
*துக்காச்சி மணியன்
*முத்தூர் மணியன்
*இடையாற்று மணியன்.
என்று கூறப்பட்டாலும் அவற்றுள் எந்தவித வேறுபாடும்"இல்லை. ஒரே குலம் ஆகும்.
*"சென்னெல்செறி முகவனூா் ஆரியூா் மணியனூா்*
*சீர்பாலை முத்தூருடன்*
*திங்களூா் மருதுறை கிடாரமது நிரவியூா்*
*திகழ்மணப் பள்ளிஅயிலூா்*
*புன்னநகா் அலகுமலை இறையனூா் கூடலூா்*
*புகழ்பெருச் சாணிமானூா்*
*பேரான காரையூா் வாணியம் பாடியும்*
*பெருவிசய மங்கைஏழூா்*
*மன்னா்வளா் காங்கயம் எண்ணமங் கலமதும்*
*மணத்திடல் கடத்தூருடன்*
*வடிவுடைய மங்கையும் வேம்பநகா் ஆத்தூா்*
*வடிவுடைய விதாிதனையும்*
*சென்னிகிாி குடந்தைவயி ரூசியும் துா்க்கைநகா்*
*செம்மைபெறு மணியகுலனே*
*செம்பபூ பதிஉதவும் பொியண மகீபனே*
*செகமண்ட லாதிபதியே"*
என்பது அவ்வூா்களை குறிக்கும் காணிப்பாடலாகும்.
கல்வெட்டுகள்:
மணியன் குலம் தொடர்பான கல்வெடடுகள் முத்தூா், பருத்தியூா், செங்கம், மோகனூா், நத்தக்கடையூா், சதுமுகை,நம்பியூா், கீரனூா்(பழனி), ஆகிய இடங்களில் உள்ளன.
கீழைக் கூடல் மணியன் குலப் புண்ணியதேவன் பருத்தியூர் நக்கீசுவரமுடையார்க்கு சந்தியா தீபம் வைத்துள்ளனா்.
*மற்ற கொங்குக் குலங்களுக்கு இல்லாத சில தனிப்பட்ட சிறப்புகள் மணியன் குலத்தாருக்கு உண்டு*
*தெய்வமாக மாறிய தேனாயி:*
மோகனூர் அருகில் உள்ள குமரிபாளையம் என்னும் ஊரில் மணியகுல வேளாளர் ஒருவர் இருந்தாா். அவரிடம் கால்நடைச் செல்வம் மிகுதியாக இருந்தது. அவர்கள் வீட்டு தேவைக்கு போக மீதியான பால், தயிா், வெண்ணெய், நெய் போன்ற பொருட்களை பிறருக்கு விற்பா். மணிய குலச் செல்வர் மனைவி தேனாயி. தேனாயி பக்கத்து ஊர்,சென்று அவற்றை விற்று வருவாள்
தேனாயி மிகவும் பக்தி உடையவள், இறை நம்பிக்கை உடைய அவள் காலை எழுந்தவுடன் குளித்து பின்னா் இறைவனை வணங்கியே தன் செயல்களை தொடங்குவாள். ஒரு நாள் தயிா் முதலிய பொருள்களை விற்றுவிட்டுத் திரும்பும்போது காட்டு வழியில் வந்து கொண்டிருந்தாள். வில்வ மரங்கள் உள்ள பகுதியிலுருந்து *"எனக்கு ஒரு விளக்கு வை"* என்ற சத்தம் கேட்டது.திரும்பி பார்த்தாள் . ஒருவரும் இல்லை. மீண்டும் நடந்தாள். மீண்டும் " எனக்கு ஒரு விளக்கு வை "என்ற அதேகுரல் கேட்டது. குரல் வந்த திசையை நோக்கி சென்று பார்த்தாள். ஒரு வில்வ மரத்தடியில் அழகான சிறு சிவலிங்கம் இருந்தது. அதை கண்டு பரவசம் அடைந்த தேனாயி விரைந்து வீடு சென்று வந்து விளக்கு வைத்து வழிபட்டாள். வழிபாடு தினமும் தொடந்தது.
இந்நிலையில் தேனாயி கருவுற்றாள். பல ஆண்டுகள் மகபேறு இல்லாமல் இருந்த தேனாயி காட்டில் சென்று யாரோ ஒருவனுடன் கூடி கருவுற்றாள் என்று எண்ணினா். ஒரு நாள் தேனாயி வில்வ காட்டிற்கு விளக்கு வைக்க போகும் போது தொடர்ந்து பின் சென்று பார்த்தனா்.உண்மை அறிந்தனா்.அன்று பெரும் காற்று வீசியது. தேனாயி வைத்த விளக்கு, காற்றிலும் அசையாமல் ஆடாமல் எரிந்தது. தேனாயின்,தெய்வ"தன்மை அறிந்து போற்றினர். தேனாயிக்கு ஆண் குழந்தை பிறந்தது. வில்வக்காட்டு சிவலிங்கத்திற்கு கோயில் கட்டினர். குமரி வழிபட்ட காரணத்தால் குமரீச்சுரம் என்று அழைத்தனர். ""அசையா விளக்கா்"" என இறைவனுக்கு பெயரிட்டனா். அம்மன் பெயரை குமரியம்மன்− தேனாயி என்று அழைத்தனா்.
தொன்மையான அக்கோயில் *"கொங்கு குமரி"* எனப்பட்டது.தெய்வதன்மை பொருந்திய தேனாயிக்கு"மகப்பேறு கொடுத்த காரணத்தால் அப்பகுதி *மகவனூா்* என்று அழைக்கப்பட்டது. அது காலப்போக்கில் *மோகனூர்* என மாறியது.
*மணியன்குல மகான்செல்லகுமாரா் பிறப்பு*:
முத்தூா் மணியகுலச் செல்லப்பகவுண்டர்− பாவை தம்பதியனர்க்கு சிவன் அருளால் பிறந்த ஆண் குழந்தைக்கு *"செல்லகுமரன்"* என்று பெயர் வைத்தனா். சோழீசர் காயிலில் இறைபணியாற்றி வந்த முத்தன் குலக் குமராயி செல்வகுமரானை வளர்ப்பதில் உறுதுணையாக இருந்தாள். சின்னமுத்தூரில் குமராயி தவசாலை என்னும் மடம் அமைத்து இறைபணியாற்றி வந்தவர்.
இறையருள் பெற்ற செல்லகுமரன் தேச சஞ்சாரம் சென்று பல தலங்களை தரித்து செஞ்சேரி மலையில் ஒரு குகையில் தங்கி யோக நிலையில் இருந்தார். ஏற்கனவே அங்கு தவம் இயற்றிய தொட்டியச் சின்னான்,உபய குப்பன் இருவரும் செல்லகுமரனுக்கு பணிவிடை செய்தனர். அடியார்"பலா் வந்து வணங்கினா். சிவராத்திரியில் தம்மிடம் வருமாறு கூறி அனுப்பி வைத்தார்.
செல்லகுமரா் குமராயி மடத்தையே கோயிலாக கொண்டார். செல்லக்குமாரரையே வணங்கி பணிபுரிந்த குமராயி அத்தாய், முத்தாய், செல்லாய் ஆகியோரை தொடந்து அருட் பணியாற்ற கூறி அமரா் ஆனார். செல்லகுமரா் உட்பட அனைவருக்கும் குமராயி திருமடத்தில் சன்னதிகள் அமைக்கபட்டன. மாசிமகம் சிவரவத்ரியில் விழாவிற்க்கு தக்க,ஏற்பாடுள் செய்து விட்டு *மணியகுல முப்பெண்களும் இறைநிலை அடைந்தனர்*.
*மணிய குலத்தாரும் , மணியகுலத்தினரிடம் அன்புடையவர்களும் தெய்வநிலைக்கு உயர்ந்து வணங்கபடுவது சிறப்பிற்குறியது*
மணியகுல ச் செல்வராக பிறந்து தெய்வீக நிலையடைந்த செல்லகுமாரசாமி கோயில் சின்னமுத்தூரில் உள்ளது.குறுப்பு நாட்டுக்"கத்தாங்கண்ணியில் குடியேறிய மணிய குலத்தார் கத்தாங்கண்ணியில் செல்லக்குமாரசாமி கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர். முத்தூரில் உள்ளது போன்றே படைத்தலைவன் குப்பண்ணன், தெய்வீக பெண்கள் குமராயி,அத்தாயி, முத்தாயி, செல்லாயி, மசரியத்தாள் ஆகியோருக்கும் கோயில் எடுத்து மாணிய குலத்தார் வணங்கிவருகின்றனா்.
குமரீசர்க்கு தெய்வபணி கிருஷ்ணதேவராயன் செய்ததாக கல்வெட்டு் கூறுகிறது.
மோகனூர் மணியன் குலத்தில் இருந்து முத்தூர் மணியன் குலம் தோன்றியது. தென்னிலைவ் போரில் முத்தன் குலத்தினா்க்குத் துணையாகப் போரிட்டு,வெற்றியடைந்த மணியன் கூட்டத்தாருக்கு முத்தூரில் காணியுரிமை அளித்தனர்.
முத்தூர் மணியன் குலத்தினர் ஒருமுறை *பயிர குலத்தினரை* வென்று பழைய கோட்டையை கைப்பற்றியுள்ளனா். மைசூர் மன்னரின் உதவியை நாடிப் பின்னர் பயிர குலத்தினர் வென்றுள்ளனா். குப்பியண்ண சுவாமிகள் மணியன் குலத்தினா். போர் புரிந்து தெய்வீக ப பேற்றை அடைந்தவர்.
காங்கேய நாட்டுக் காணிப்பாடல் காரையூரில் (நத்தக காடையூர்) முதன்மை காணியாளர்களாக மணியன் குலத்தாரையே குறித்துள்ளது.
*அரசா் புகழ் தென்காரையூர்*
*அதில்வரு மணியனை*
*கியாதி யுள்ள பயிரனை......*
என்று காரையூர் கணிப்பாடல் குறித்துள்ளது.
மோகனூா் நவலடியானைக் குலதெய்வமாக கொண்ட மணியன் குலத்திலிருந்து முத்தூர் மணியம் கிளைத்தது.
*குடியேற்றம்*:
மேல்கரை அரைய நாட்டில் துக்காச்சி நொய்யல் கரையில் உள்ள ஊா் அடிக்கடி நொய்யலாற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட துக்காச்சி *மணியன்குல சடையப்பகவுண்டர்* தன் குடும்பத்தோடு தெற்கு நோக்கி பயணம் செய்து அண்ட நாட்டு குட்டம் என்னும் பழம்பெரும் ஊர் எல்லையில் உள்ள கோட்டூரில் குடியேறினார். ஆதி சடையப்ப கவுண்டர் குடியேறும் போது தன் காவடியை உடன் எடுத்து சென்றார். காவடி வணக்கம் காலப்போக்கில் கோயில்கட்டி முருகன் கோயிலாக ஆண்டவர் கோவில் உருவாகியது.
*"மணியன்குலத்தாரை போற்றி வீழ்ந்தவரும் இல்லை. மணியன்குலத்தாரை இகழ்ந்து சிறப்பாக வாழ்ந்தோரும் இல்லை"*
..........முழுமையாக படித்தமைக்கு நன்றி...